பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 படியோ வந்து விட்டது. துரோணரைப் பற்றிக் கவிஞர் பின்வருமாறு கூறினார்: துரோணாச்சாரி கெளரவர்க்கும் பாண்டவர்கட்கு மட்டுமே வில்வித்தை கற்றுக்கொடுத்தான். ஏகலைவன் என்னும் வேடன் தனக்கும் வில்வித்தை கற்றுத்தருமாறு துரோணனிடம் வேண்டிக் கொண்டான். துரோணன் மறுத்துவிட்டான், பின் ஏகலைவன், துரோணனைப் போல் ஒர் உருவம் செய்து வைத்துக்கொண்டு, அதன் எதிரே வில்வித்தை பயின்றான். தன்னம்பிக்கையாலும் ஊக்கத் தினாலும் வில் பயிற்சியில் மிக்க திறமை உடையவன் ஆனான். அவன் ஒரு சமயம் அர்ச்சுனனுக்கு மேற்பட்ட திறமையை வெளிப்படுத்திய போது,துரோணன் வியந்து, நீ யாரிடம் வில்வித்தை பயின்றாய் என்று கேட்டான். உங் களிடமே என்று வேடன் பதில் இறுத்தான். நான் உனக்குக் கற்றுத் தரவில்லையே என்று துரோணன் கூறினான். உங் களைப் போல் உருவம் செய்துவைத்துக் கொண்டு அதன் எதிரில் வில்வித்தை பயின்றேன்; அதனால் நீங்களே என் "குரு' என்றான் வேடன். கேட்ட துரோணன், ஏகலைவனை நோக்கி, நான் குரு என்றால் நீ எனக்குக் குருதட்சணை கொடுக்க வேண்டுமே என்றான். எது கேட்பினும் தருகிறேன் என்றான் வேடன். உனது வலக்கைக் கட்டை விரல் வேண்டும் என்றான் துரோணன். அவ்வாறே தன் வலக்கைக் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் வேடன். பாருங்கள்! வலக்கைக் கட்டை விரல் இருந்தால்தான் வில்லிலிருந்து அம்பைச் செலுத்த முடியும். எனவே, ஏகலைவனைத் தொலைத்துக் கட்ட வேண்டும் என்ற தீய