பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93 பொறித்த பணம் என்னும் பொருளில் சின்ன என்னும் சொல் உள்ளது-என்றெல்லாம் பல கூறிக் கதிரேசனாருக்கு மறுப்பு தெரிவித்தார். - - . . . . . - இந்தக் கூட்டம் நடை பெற்றபோது நான் அங்கு இல்லை; பின்னர் இதைக் கேள்வியுற்றேன். அதன் பிறகு ஒரு நாள் சென்று கவிஞரைக் கண்டபோது, இந்தச் செய் தியைக் குறிப்பிட்டுப் பின் வருமாறு ஒரு கருத்து கூறி னேன்: - 'சின்ன என்னும் சொல் இலக்கிய வழக்கு அன்று என ஒதுக்கிவிடுவதற்கு இல்லை. அதற்காக, சின்னம் பொறித்த பணம் என்று பொருள் கூறிச் சமாளித்தாக வேண்டும் என்பதில்லை. சின்ன என்னும் வழக்காற்றுச் சொல் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள்து, சின்ன மலர்க்கோதை (சீவக சிந்தாமணி-2369); சின்னத்துணி” (சீவக சிந்தாமணி-2929;) நனை சின்னமும் (சின்னபூவும்) நீத்த நல்லர்’ (கம்ப ராமாயணம்-பூக்கொய் படலம்-12); 'சின்னப்படும் குவனை (திருக்கோவையர்-334); சின்ன மாக ஈர்ந்திட (திருவாலவாயுடையார் திருவிளை யாடல் புராணம்: 36-8);'சின்னம் பட வருத்தம் செய்தாலும் (நீதி வெண்பா-64) முதலிய இலக்கிய வழக்காறுகளை நோக்கின் உண்மை புலனாகும். - * . மற்றும் சின்னப்பா, சின்னம்மா, சின்னி, சின்னதம்பி சின்னசாமி, சின்னராசு, முதலிய பெயர்கள் மக்க்ட்கு இடப்பட்டிருப்பதும் ஈண்டு எண்ணுதற் குரியது. மேலும், சின்னம்மா, சின்னாபி, சின்னாத்தா, சின்னஞ் சிறிய, சின்னத்தனம், சின்னபுத்தி, சின்னது, சின்னபடி, சின்ன பையன், சின்ன மனிதன் முதலிய வழக்காற்றுச் சொற்.