பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 களும் நடைமுறையில் உள்ளன. அம்மை வகைகளுள். 'சின்னம்மை என்னும் வகையொன்று குறிப்பிடப்படுகிறது கோயில்களில், தேவடியார் (தெய்வ த்தின் அடியவர்) ஒருவகை மேள முழக்கத்துடன் ஆடும் நடனவகைக்குச் 'சின்ன மேளம் என்னும்பெயர் வழங்கப்படுகிறது. எனவே 'சின்ன பணம்’ என்பது செய்யுள் வழக்காற்றில் வந்திருப்பது தவறு அன்று என்று நான் கூறினேன், கவிஞரிடம் சொல்வதற் கென்றே நான் செப்பனிட்டுக் கொண்டு வந்தவை இவை. எனது உரைக்குக் கைம்மாறாகக் கவிஞரின் தலையசைப்பும் புன்னகையும் கிடைத்தன. இப் பொழுதும் சிலர் சின்ன என்னும் சொல்லை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது வியப்பா யுள்ளது. அருள் உள்ளம் - கவிஞர் சிலரிடம் கடுமையாக நடந்து கொண்டது உண்மைதான். அதே நேரத்தில் அவர் மிக்க அருள் உள்ள வரும் ஆவார். ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ (101) என்று, அதியமானை ஒளவையார் புகழ்ந்து பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் பகுதிக்கு ஏற்பக் கவிஞரும் சில ரிடம் நடந்துகொள்வார். குறிப்பிட்ட ஒர் இரவலர் வாரத்திற்குஇருமுறை மும்முறை கவிஞர் வீட்டுத் தெரு வாயிற்படியில் வந்து நிற்பார். கவிஞர் ஒர் அணா கொண்டு வந்து அவர் கையில் கொடுப்பார். அப்போது