பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97 இரண்டாம் வகுப்பில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருந் தேன். . - புகைவண்டி திண்டிவனம் நிலையத்தில் சிறிது நேரம் நின்று பின் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் யாரோ விரைந்து ஏறிய ஒலி கேட்டது, அப்போது, நிலைய ஊழியர் ஒருவர், புறப்பட்டு விட்ட வண்டியின் டிரைவரை விளித்து, டிரைவர்! இன்னும் ஆண்பிள்ளை ஏறவில்லைபெண் பிள்ளை மட்டும் ஏறியுள்ளார் - ஆண்பிள்ளையும் ஏறட்டும்- வண்டியை நிறுத்து என்று கத்தினார். உடனே வண்டியும் றின்றது. ஆண்பிள்ளையும் ஏறிக் கொண்டார். வண்டி புறப்பட்டுச் சென்றது. ஏறிய ஆடவர் மனைவியை நோக்கி, நான் ஏறி இருக் காவிட்டால், நீ குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்திருப்பாய்? என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி, 'நீங்கள் எப்படியாவது திண்டிவனத்தில் ஒரு வாடகைக் காராவது எடுத்துகொண்டு அடுத்த அடுத்த ஏதாவது ஒரு நிலையத்தில் எங்களோடு வந்து சேர்ந்து கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அப்படி வராவிடின், நாங்கள் எழும்பூர் நிலையத்தில் இறங்கி உங்களுக்காகக் காத்திருப்போம் -என்று சொன்னார். இவ்வாறு உரை யாடுங் குரல்கள் இதற்குமுன் கேட்ட குரல்களாக எனக் குத் தென்பட்டன. நான் இன்னும் அவர்களைப் பார்க்க வில்லை; அதற்கு உரிய காரணமாவது: நான் மூளைக்கட்டி நோயாளி. B.M.R. Test முடிவு எடுத்துக் கொண்டு சென்னை செல்கிறேன். அப்போ திருந்த உடல் நிலையில் பகலில் வெயிலையோ இரவில் விளக்கையோ என்னால் பார்க்க முடியாது. பார்த்தால்