பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


காக்கைஎன் சாதியென்றான் - பொங்கும்
கடலும்என் சாதியென்றான்
பூக்கள் கொடிகள் எல்லாம் - பாடும்
புலவரின் தோழன் என்றான்

சாதி சமயங்களைப் - பேசிச்
சண்டைகள் செய்பவரை
மோதி மிதிப்பனென்றான் - அவர்கள்
முகத்தில் உமிழ்வனென்றான்

35