பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணக்கை வெறுத்துவந்தான் - கண்டால்
காத வழிசென்றான்
பிணக்கெனச் சொல்லிவந்தான் - பாரதி
பிடிவாதம் செய்துவந்தான்

சோலைக் குயிலைப்போல் - பூவைச்
சுற்றும் வண்டைப்போல்
காலை மாலைகளில்-அவன்
கவிதை பாடிவந்தான்.

4