சிறுமை சீறிய வீரன் * சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா ”
வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்” என்ற தலைப்பிட்டு ஒரு கவி யியற்றியிருக்கிருர் பாரதி யார். அதிலே சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்பது ஒர் அடி. அந்தச் சிறுமை கண்டு சினங்கொண்டு பொங்கி யெழுந்து கோபிக் கும் குணம் பாரதியாரிடம் அமைந்திருந்தது.
ஹோம்ரூல்" கிளர்ச்சி நடந்த காலத்திலே திலகரது சிஷ்யர்கள் ஒரு சமயம் அன்னே வசக் தையார் என்று சொல்லப்படும் அன்னி பெஸண் டைக் கண்டிப்பதுண்டு. அந்த மாதிரியான கண்டனக் கூட்டம் ஒன்று சென்னைக் கடற் கரையிலே நிகழ்ந்தது. அக்கூட்டத்திலே பாரதி யார் பேசினர் ; பேசும் பொழுது அன்னே பெஸண்டை அவள் , என்று குறிப்பிட்டார். அது அன்னி பெஸண்ட் பக்தர் சிலருக்குச் சுருக்' கென்று பட்டது போலிருக்கிறது! அவள் என்று குறிப்பிடக் கூடாது; அவர்' என்று சொல்லவேண்டும் என்று அவர்கள் ஆக்ஷேபித் தார்கள். அவள் என்பது மரியாதைக் குறை வான பாஷை யென்பது அவர்களது எண்ணம்.
உடனே பாரதியாருக்குக் கோபம் வந்து விட் டது. தம்மை யாரோ அவமரியாதை செய்வ
பக்கம்:பாரதி லீலை.pdf/16
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
