பக்கம்:பாரதி லீலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத ஸமுதாயம் வாழ்கவே “ தனி யொருவனுக்கு உணவிலை எனின் ஜகத்தினை அழித்திடுவோம் ” விபவர்க்கவாசி நீயுத வ. வெ. சு. ஐயர் தலைமையில் சென்னைக் கடற்கரையில் ஒத்துழை யாமைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத் திலே பாடுமாறு பூநீயுத ஐயர் பாரதியாரைக் கேட் டுக் கொண்டார். அப்பொழுது பாரதியார் பாரத ஸமுதாயம் வாழ்கவே ” என்ற பாட் டைப் பாடினர்; அதன்பின் அல்லா அல்லா என்ற பாட்டுப் பாடினர். பாட்டைக் கேட்ட மக்கள் பரவசமானுர்கள். அந்த நாளேயிலே மின் சார விளக்குக் கிடையாது. கியாஸ் லேட் உண்டு. கியாஸ் லேட் கண்டிராக்டரான முஸ்லிம் ஒருவ ருக்குப் பாரதியாரின் அல்லாப் பாட்டைக் கேட் டதும் அளவற்ற ஆனந்தம் பொங்கிவிட்டது. உடனே அவர் ஒடிப்போய் சோடா வாங்கி வந்து பாரதியாருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து விசிறி கொண்டு விசிறி பாரதியாரின் ஆசுவாளத் தைத் தணித்தார். அதுவே கடைசி முறையா கப் பாரதியார் பொதுக் கூட்டத்திலே தலைகாட் டியதாகும். அதன்பின் அவரது காலம் அருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/19&oldid=816536" இலிருந்து மீள்விக்கப்பட்டது