பக்கம்:பாரதி லீலை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயற்கையில் ஆனந்தம் ! பாரதியார் சுதேசமித்திரன் ' உதவியாசிரி யராயிருக்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னே ஜார்ஜ்டவுன், எாபாலு செட்டித் தெருவில் இருக் தது. திருவல்லிக்கேணியி லிருந்து பட்டணம் போப் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண் டிக்குமாக அவரது மனேவியார் நம் பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருக்கோடிவருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி விணுகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கடையைக் கட்டிவிடு வார்; திருவல்லிக்கேணியிலிருந்து நடக்கே ஆபீஸ் போவார் ; சிற்றுண்டி யருந்தும்பொழுது யாரா வது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத் தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார் ; இல்லா விடில் பட்டினிதான் ! மாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் விழுங் காட்சியைக் காண்பதென்ருல் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ் வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமன மாகும் காட்சியை அவர் கவனித்துக்கொண்டே யிருப்பார் ; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டு விடுவார். யார் கூப்பிட்டாலும் காதில்விழாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/22&oldid=816539" இருந்து மீள்விக்கப்பட்டது