தோழமை
" தோழனுடன் சம்பாவிப்பதைக் காட்டி லும் பெரிய இன்பம் வேறில்லை ’
-சுகிர்லாபம்
பாரதியாருக்கு நண்பர்களிடத்திலே அபார மான பிரியம். ஒரு சமயத்திலே தேனும் பேட் டையிலே ஒரு நண்பர் ஒரு பிரசங்கத்துக்கு ஏற். பாடு பண்ணியிருந்தார். அது சரியான வெயில் காலம். பிரசங்கம் ஐந்து மணிக்கு ஆரம்பம்.
பாரதியார் என்ன செய்தார் ! நடு வெயிலில் ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு பகல் சுமார் ஒரு மணிக்குத் தம் நண்பர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
என்ன இந்த வெயிலில் புறப்பட்டு வந்திர் கள் ?” என்று விசாரித்தார் நண்பர்.
தம்பி பஞ்சதந்திரக் கதை வாசித்திருக் கிருயா மித்திரனே விடச்சிறந்தவன் வேறில்லை ; மித்திரனுடன் அளவளாவுவதே இன்பம்’ என்று அதிலே சொல்லப்பட்டிருக்கிறதே தெரியுமா ! நீ நல்ல பிள்ளை. அதனுல் தான் வந்தேன்” என்ருர் பாரதியார்.
பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக் கொண் டிருக்தனர்.
பக்கம்:பாரதி லீலை.pdf/27
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
