பக்கம்:பாரதி லீலை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பனப்போலவும் பாடலாம் " உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் ” இந்த சம்பவம் கிகழ்ந்த இரண்டு மாதங்களுக் கெல்லாம் இன்னுெரு விஷயம் நிகழ்ந்தது. பாமர ரஞ்சிதமாகப் பாடுவதிலே அண்ணுமலே ரெட்டி யார் காவடிச்சிந்துக்கு ஒப்பானது பாடமுடி யாது ' என்று பலரும் கூறினர். அதுகேட்ட பாரதியார் சிரித்தார். சிரிப்பதிலே பிரயோ ஜனமில்லை. பாடிக் காண்பிக்க வேண்டும் : என்று எல்லாரும் கூறினர். சரி யென்று சொல்லிவிட்டுப் போனுர் பாரதியார் , அன்று மாலை ஒர் அழகான காவடிச்சிந்து பாடிக்கொண்டு வந்தார் ; அதைச் சபையோருக்குப் படித்துக் காண்பித்தார். அது பண்டித பாமர ரஞ்சிதமா யிருந்தது.கண்டு எல்லாரும் வியந்தனர்.

  • இந்த உலகிலே எந்தக் கவிஞனைப் போலவும் பாடலாம். பாடமுடியாதென்பதில்லை. கம்பனப் போல வேண்டுமானலும் பாடலாம்” என்று சொல்லி அந்தப்பாட்டையும் கிழித்தெறிந்தார் நம் கவிஞர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/31&oldid=816549" இருந்து மீள்விக்கப்பட்டது