பக்கம்:பாரதி லீலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று அங்கே ; இன்று இங்கே படிப்பெல்லாம் முடிந்தபிறகு பாரதியார் எட் டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்துவந்தார். அப்படியிருக்கும் நாளில் அவ ருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ் தாபம் நிகழ்ந்தது. அதனுலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக்கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருக் தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார். இது என்ன இப்படி நெருப்புப்பற்றிக் கொண்டதே ' என்று ஒருவர் கேட்டார். உடனே பாரதியார் பின்வரு மாறு சொன்னுர் :

  • அன்று இராவணன் ஒரு கவியை - குரங்கை இம்சித்தான். அதன் பயனுக அங்கே - இலங்கை யில் - தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ் தானுதிபதி ஒரு கவியை - என்னை - இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/32&oldid=816550" இலிருந்து மீள்விக்கப்பட்டது