பக்கம்:பாரதி லீலை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கருங்குரங்கு கட்டவிழப் பெற்றது இப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரரா யிருக்கும் பூநீ லசஷ்மீ நாராயண பிள்ளே அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரரா யிருக்கும் காலத் தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கி யிருந்தார். அது 1921-ம் வருஷம். நீ பிள்ளே யவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட் டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றி விட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்கு ஏதோ தாம் உப தேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஒதினர் ; பிறகு அவர் களேப் பார்த்துச் சொன்னுர் :

ஐயா! இப்பொழுது நம்மிடையே பேசப்படு கிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனுதி திராவிடனேக் கட்டவிழ்த்து விட்டுப் பார்க் தீர்களானுல் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவா யிருப்பான் ” என்ருர். உடனே கட்ட விழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்ன படியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலையடைந்த அந்தக் கருங்குரங்கு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/34&oldid=816552" இருந்து மீள்விக்கப்பட்டது