பக்கம்:பாரதி லீலை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


' ஷெல்லியன் கில்டு ' ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது அநூல்கள்மீதும் பாரதிக்கு எல்லே யற்ற பற்று. ஸ்தாகாலமும் ஷெல்லி யைக் கையிலேயே வைத்துக்கொண் டிருப்பார். 1902-ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சங்கிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு ஷெல்லியன் கில்டு ' (Shellian Guild) gráörg Gului. Įstsirairs š. திலே பாரதியாரின் இந்தியா’ பத்திரிகையில் உதவியாசிரியராகவிருந்த எட்டயபுரம் பூரீமான் . பி. பி. சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஒர் அங்கத்தவர். இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டய புரம் அ. கைலாசம் பிள்ளே என்பவரும் அதிலே ஒர் உறுப்பினர். அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதாரளங்களையும், பைரனின் தேசீய கீதங்களே யும் படித்துக் காண்பிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/36&oldid=816554" இருந்து மீள்விக்கப்பட்டது