பக்கம்:பாரதி லீலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ மழை பொழிக்தார் சுதேசிக் கப்பல் ஒட்டிய தேசபக்தர் வ. உ. சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டு ரிமான் டில் இருந்தபொழுது பாரதியார் அரசாங்கத்தின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்ருர், சிறையிலே தமிழ் நாட்டுத் தேசபக்தர் அடைபட் டுக் கிடந்தார். பாரதியார் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஒரு கூடை கிறையப் பூ வாங் கிக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூடை 幼 வையும் சிதம்பரம் பிள்ளே மீது வர்வித்து ஆனந்த பாஷ்பம் பொழிந்தார் பாரதியார். எட்டயபுரத்திலே இருக்கும்பொழுது பாரதி யாருக்கும் சிதம்பரம் பிள்ளேக்கும் அவ்வளவாக மனப்பிடித்தம் கிடையாது. சூரக் காங்கரலின் போதுதான் இருவருக்கும் அத்தியந்த ஸ்நேகம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/43&oldid=816562" இலிருந்து மீள்விக்கப்பட்டது