பக்கம்:பாரதி லீலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவலயானந்த மொழிபெயர்ப்பு வலம்ஸ்க்ருதத்திலே குவலயானந்தம் என்று ஒரு நூல் இருக்கிறது. அதை நீ. சங்கரசாஸ் திரிகள் என்பார் தமிழில் மொழி பெயர்த்தார். எட்டயபுரம் மீனுட்சி சுந்தரக் கவிராயர் அதைப் பாட்டாகப் பாடினர். எட்டயபுரம் சின்ன ராஜாவால் அது அச்சிடப்பட்டது. அப்பொழுது பாரதியார் எட்டயபுரத்திலிருந்தார். தமிழ் மொழி பெயர்ப்பிலே அணி நயத்திலே சில குற்றங்கள் இருப்பதாகவும் மூல நூலிலே அவ்விதம் இருக் திருக்க முடியாதென்றும் பாரதி சாதித்தார். சாதித்த பிறகு அதை மெய்ப்பித்தும் காட்டினர். உண்மையில் மூல நூலிலே அக்குற்றம் இல்லே. அப்பொழுது பாரதிக்கு அவ்வளவாக ஸம்ஸ்க் ருதம் தெரியாது. இம்மாதிரி நூல் இயற்றுவது பெரிய காரியமில்லை யென்றும் அம்மாதிரி நூல் இயற்றித் தருமாறு தம்மைச் சமஸ்தானம் கேட் டுக் கொண்டால் தாம் இயற்றித்தரச் சித்தமா யிருப்பதாயும் கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/44&oldid=816563" இலிருந்து மீள்விக்கப்பட்டது