பக்கம்:பாரதி லீலை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ராடிகல் கிளப் சென்னேயில் இராமசாமி தெருவில் பாரதியார் ராடிகல் கிளப் என்று ஒரு சங்கம் ஏற்படுத்தி அர். தீவிரவாதச் சங்கம் என்று அதைச் சொல்லலாம். சென்னை வக்கீல் பூரீ. எஸ். துரை சாமி அய்யர், சர்க்கரைச் செட்டியார்,பால் ஆகிய பலரும் அந்தச் சங்கத்திலே அங்கத்தவர். அங்கே எப்படித் தெரியுமா ? பிராமணர்கள் எல்லாரும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்துகொள்ளவேண்டியது. பிராமணரல்லாதார் - கிறிஸ்தவருங்கூட - சமைத் துப் பிராமணர்களுக்குப் பரிமாறவேண்டியது. இந்தமாதிரியாக ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணியது அந்தத் தீவிரவாத சங்கம். அத ேைல சென்னை சமூக சீர்திருத்தச் சங்க மே ஆட்டங்கண்டு போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/47&oldid=816566" இருந்து மீள்விக்கப்பட்டது