பக்கம்:பாரதி லீலை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கீரை வாங்கியது எல்லாரும் ஒர் குலம் பாரதியார் ஒரு சமயம் கறிகாய் வாங்குவதற். காகக் கடைக்குப் போனுர், ஒரு ரூபாய் கொடுத்து ஒருசுமை ைேரயை வாங்கித் தலையிலே சுமந்துகொண்டு விடுவந்து சேர்ந்தார். கீரைச் சுமையைப் பார்த்ததும் எதற்கு இவ்வளவு. யார் சமைக்கிறது ? நமக்குக் கொஞ்சம் போதாகோ என்ருர் அவரது மனேவியார். உனக்கு வேண்டி யதைச் சமை. கீரைகூட சமைப்பதற்கு இல்லாத விட்டுக்கெல்லாம் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுசொல்லி, பாரதியார் கீரையை ஒவ்வொருவர் வீட்டுக்கும் எடுத்து விகி யோகம் செய்தார். எல்லாரும் ஒர் குலம்’ * முப்பது கோடியும் வாழ்வேம்’ என்று பாடிய கவியன்ருே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/49&oldid=816568" இருந்து மீள்விக்கப்பட்டது