பக்கம்:பாரதி லீலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v யின் சரித்திரத்தை எழுத வேண்டுமென்பது எனது அவா. எனது செயலில் யான் எவ்வளவு துரம் வெற்றியடைய முற்பட்டுள்ளே னென்று மதிப்பிட வேண்டிய பொறுப்பு தமிழ் நாட்டவ ருடையது. ஒருவரது குணத்தை அவரது வாழ்விலே கிக ழும் சம்பவங்களால் அறியலாம். அதே மாதிரி யாக, பாரதியாரின் பண்பினையும் அவர்தம் வாழ் வில் நிகழ்ந்த ருசிகர சம்பவங்களால் அறியலாம். பாரதியார் எழுதிய கடிதம் இப்புக்ககத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது அவர்தம் உள்ளத்தை நன்கு புலப்படுத்துகிறது. படிப்போர் செளகரியத்தை உத்தேசித்துப் பாரதியின் சரிதச் சுருக்கமும் கவிதா ஆராய்ச்சியும் இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாரதியின் கவிதையிலே ஆர்வமுண்டு பண்ண எனது விமர்சனம் உதவி புரியுமென்று நம்புகிறேன். யான் சென்று கேட்டபொழுது தத்தமக்குத் தெரிந்த சம்பவங்களே யெல்லாம் கூறியவர் பலர். நவசக்தி ஆசிரியர் பூரீமான் திரு. வி. கலியாண சுந்தர முதலியார், எட்டயபுரம் - வித்வான் - குருகுஹதாஸ்ப் பிள்ளே, சுதேசமித்திரன் உதவி யாசிரியர்களான பூரீமான்கள் உலகநாத நாயகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/5&oldid=816569" இலிருந்து மீள்விக்கப்பட்டது