பக்கம்:பாரதி லீலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தி தருவாள் நம்பினர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு: அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம். கையில் காசில்லை. விட்டுக்குப் போனுல் மறு வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்ற யோசன. இங்கிலையிலிருந்த பாரதியாரிடம் ஒரு வர் பத்து ரூபாய் கொடுத்தார். ரூபாயை வாங் கிக் கொண்டு பாதி வழி வருகையில் ஒருவன் பாரதியைக் கண்டு தன் கஷ்டத்தைக் கூறின ணும். உடனே அவனிடம் அந்தப் பத்து ரூபா யையும் அப்படியே கொடுத்து விட்டார் பாரதி. என்னய்யா! சோற்றுக்கு வழியில்லை. கையி லிருந்த ரூபாயைக் கொடுத்து விட்டீர் ' என்று அருகில் இருந்தவர் கேட்கவே சக்தி தருவாள் : என்று கூறிக்கொண்டே விடுவந்தார் பாரதியார். வீட்டிலே சாப்பாடு தயாரா யிருந்தது. எப்ப டியோ சமையலாய் விட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/51&oldid=816571" இலிருந்து மீள்விக்கப்பட்டது