பக்கம்:பாரதி லீலை.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் விவாதம் பாரதியார் அரசியல் விஷயங்களில் தீவிர மான நோக்கமுடையவர். ஆயினும் கொள்கை விஷயமாக எவ்வளவு சண்டை போட்டாலும் பிறகு அதை மறந்து நட்புக் கொண்டாடுவது பாரதியின் வழக்கம். பூரீமான் ஜி. எ. நடேச னும் பாரதியாரும் அரசியல் விஷயம் பற்றி விவா திக்கும்போது பெரும் சண்டை போடுவார்களாம். பின்னே இருவரும் சந்தோஷமாகப் பேசிக் கொள்வாராம். அன்று ஆவணி அவிட்டம். பூரீமான் ஜி. ஏ. நடேசன் காமோகார்ஷி' ஜபம் செய்து கொண்டிருந்தார்! என்ன ! நடேசா ! என்ன செய்கிருய் ! என்ருர் பாரதி. காமோகார்வி ஜபம் என்ற பதில். Love did, Man did, Good morning, Good morning என்று அதை மொழிபெயர்த்துச் சொன்னர் உடனே பாரதியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/52&oldid=816572" இருந்து மீள்விக்கப்பட்டது