பக்கம்:பாரதி லீலை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'வருவாய் மயில்tதினிலே சென்னே இராயப்பேட்டையிலே குகானந்த 3 என்ருேரிடமுளது. ஒரு நாள் அங்கே பாரதியார் விஜயம் செய்தார். அன்பர் சிலர் கிலேயம் அவரைப் பாடுமாறு கேட்டனர். உடனே பாரதியார் கின்று கொண்டார். அவர் எதிரே சுப்பிரமணியர் படம் அழகாக அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வருவாய் மயில் மீதினிலே என்ற பாட்டைப் பாட ஆரம்பித்தார். பாட்டுப் பாடப் பாட அங்கே உட்கார்ந்திருந்தவர்க்கெல்லாம் ஆவேசம் வந்து விடும்போலாயிற்று. இன்னும் சிறிது நேரம் பாடி ல்ை எனக்கு ஆவேசம் வந்திருக்கும் ' என்று ஒவ்வொருவரும் பிறகு சொல்ல லாயினர். பாரதி யார் பாடக் கேட்டால் நம்மையும் மறந்து உணர்ச்சி பொங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/55&oldid=816575" இருந்து மீள்விக்கப்பட்டது