பக்கம்:பாரதி லீலை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 பனே துங்கின்மீது அவருக்கு உயிர் ஷெல்லிமீது அவருக்கு அன்பு. ஷெல்லியின் கவிதை, கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தாயுமானர் பாடல் ஆகிய புத்தகங்கள் சதா அவர்கையிலிருக்கும். சில பெண்கள் உண்டு. ஒரு பாட்டுப்பாடு ' என்று யாராவது கேட்டு விட்டால் அப்பொழுது தான் பிகு பண்ணிக் கொள்வார்கள். அக்த பிகு நம்ம பாரதியாரிடம் கிடையாது. பாடு: என்று யாராவது கேட்டால் உடனே பாட ஆரம் பித்துவிடுவார். பெரிய தொனி. டக் டக் என்று தாளம் விழும் அவர் பாடும் பொழுது. அர்த்தம் கன்முக விளங்கும்; உணர்ச்சி பொங்கும்! தோற்றம் நடுத்தர உயரம் ; மா நிறம் சுழலும் கண்கள் ; அகன்ற சுெற்றி, அதிலே குங்குமப் பொட்டு ; துடிதுடிக்கும் உதடு, ஒயாது பாடும் வாய் ; கறுத்து அடர்ந்து முறுக்கி விடப்பட்ட மீசை, தலையிலே சிவப்புத்துணியால் கட்டப்பட்ட பெரிய முண்டாசு ; அதிலிருந்து வால் தொங்கும் ; ஒரு கிழிந்த கோட்டு ; கையிலே புத்தகம் : இராணுவ விரன் போன்ற அளந்த நடை. இதுதான் பாரதியாரின் தோற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/63&oldid=816584" இருந்து மீள்விக்கப்பட்டது