பக்கம்:பாரதி லீலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நான்தான் ஆரம்பத்திலேயே பாரதியைப்பற்றி விமர்சனம் செய்தால் அத்தியாயம் அத்தியாய மாக எழு தவேண்டிவருமென்று சொன்னேனே ! சக்தியிடத்திலே அவர்க்குள்ள பக்தியையும், கண்ணன்மீது அவர்க்குள்ள பிரேமையையும் எடுத்துச் சொல்லல் முடியாது. பாரதியின் சிறுகதைகள் மிக நன்முயிருக்கும். ரவீந்திரரின் கதைகள் சிலவற்றைப் பாரதியார் மொழி பெயர்த்திருக்கிரு.ர். ஆங்கிலத்தில் பாரதி யாருக்குப் புலமையில்லை யென்று சொல்லமுடி யாது. அவர் எழுதிய அக்னி முதலிய கவிகள் ’ (Agni and other Poems) -o/ā/534 சான்று பகரும். சந்திரிகையின் கதை'யைப் படிக்கும் பொழுது கதைமுடியவில்லையே! என்று ஏங்கவேண்டியிருக்கிறது. கதையை அவர் முடிப் பதற்குள் யமன் அவசரப்பட்டுவிட்டான். என்ன செய்யலாம் ! பாரதியின் நூல்களே ஒவ்வொருவரும் படித்துப் படித்துத் தாமே இன்புறவேண்டும். பாரதியின் மகத்துவம் இன்னதென்று பிறர்க்கு எடுத்துச் சொல்வது சற்று சிரமம். எவ்வளவு எளிய நடை யில் சுருக்கமாகவும் விளக்கமாகவும் தெரிவித்திருக் கிருர், அதற்கு விமர்சனம் வேறு செய்ய முடியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/75&oldid=816597" இலிருந்து மீள்விக்கப்பட்டது