பக்கம்:பாரதி லீலை.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்துகொள்ள முடியுமானல் - தமிழ் நாட் டிற்கு எத்தனை நன்மையுண்டாகும் தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனல் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசன, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். వో, தம்பி,-நான் ஏது செய்வேனடா தமிழை விட மற்ருெரு பாஷை, சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகி றது. தமிழனேவிட மற்ருெரு ஜாதியான் அறி விலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸ்ம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற் ருெரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண் டால் என் மனம் புண்படுகிறது. தம்பி,-உள்ளமே உலகம். ஏறு ஏறு ! ஏறு மேலே, மேலே, மேலே நிற்கும் நிலையி லிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத் துக்கொண்டு பிழைக்க முயற்சி புண்ணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/77&oldid=816599" இருந்து மீள்விக்கப்பட்டது