பக்கம்:பாரதீயம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதீயம்

மனம் சில சமயம் கவலையைப் பெருக்கிக்கொண்டு துன்புறும் : சில சமயம் இயல்பாக வரும் கவலைகளால் எற்றுண்டு வருந்தும் : கடந்தவற்றை நினைந்து நினைந்து வருந்துவதும் உண்டு. கவலையைப் போக்கினால்தான் மனம் கன்னெறியில் சென்று உப்பும் வழியைக் காணும் என்பதைக் கவிஞர்,

சென்றதினி மீளாது மூடரே !. நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் : சென்றதனைக் குறித்தல் வேண்டாம் ; இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று விேர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்துவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர் :

தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா. 10

என்ற பாடலால் ஆற்றுப்படுத்துகின்றார். விநாயகர் நான்மணி மாலையிலும் இக்கருத்தினையே,

கவலைப் படுதலே கருநர கம்மா ! கவலையற் றிருத்தலே முக்தி : என்று வேறொரு விதமாகவும் வற்புறுத்தி உரைப்பர். நெஞ்சிற் கவலை கிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை ‘ என்று இதனை மேலும் அரண் செய்வர். ஆன்மாவின் இயல்பைத் தெரிந்துகொண்டால் மனத்தெளிவு உண்டாகும் என்பதை, சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்

செய்கையுங் தேர்ந்து விட்டால்-மனமே ! எத்தனை கோடி இடர்வந்து சூழினும் எண்ணஞ் சிறிது முண்டோ ? .

(சித்து - ஆன்மா) என்பதில் கவிஞரின் மனத்தெளிவினைக் காணலாம். தாயுமான அடிகளும் பந்தமறும் பளிங்கனைய சித்து: என்று கூறிப்

10. வே. பா : 20-சென்றது மீளாது 11. தோ, பா : விகா மா.36. அடி 21-22 12. தோ. பா : 17. மகாசக்தி, வெண்பா-2 13. கை : 24 தெளிவு-3 14. தா. பா. ஆகாரபுவனம்-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/100&oldid=681119" இலிருந்து மீள்விக்கப்பட்டது