பக்கம்:பாரதீயம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதீயம்

என்று தாயுமான அடிகளும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இதனையொட்டியே பாரதியாரும்,

உயிரெலாம் இன்புற் றிருக்க வேண்டி, கின் னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.” என்று கூறியுள்ளதைக் காணலாம். பிறிதோரிடத்தில் இவர்,

மண்ணி வார்க்கும் துயரின்றிச் செய்வேன்.

வறுமை யென்பதுை மண்மிசை மாய்ப்பேன்.”* என்று பிறர் துயர் தீர்ப்பதைக் கடமையாகக் கொள்வதைக் காணலாம்.

பிறர் கலத்தின் பொருட்டே கவிஞர் இறைவனை வேண்டுவதைப் பலவிடங்களில் கண்டு மகிழலாம். ஒரு பாடலில்,

பேசாப் பொருளைப் பேசநான் துணிக்தேன்; கேட்கா வரத்தைக் கேட்ககான் துணிந்தேன்; மண்மீ துள்ள மக்கள், பறவைகள், விலங்குகள் பூச்சிகள், புல்பூண்டு, மரங்கள், யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்புற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா ? என்று எல்லோரும் இடும்பை தீர்ந்து இன்பமுடன் வாழவேண்டும் என்பதைச் சக்திகுமரனிடம் வேண்டுவதைக் காணலாம். இதே பாடலில்,

ஞானா காசத்து நடுவே நின்று.நான் ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக: துன்பமும், மிடிமையும், கோவும்; சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைே திருச்செவி.கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனே ஆகுக’ என்பாய் ஐயனே! என்று இக்காட்சியை கிதர்சனமாகக் காட்ட வைக்கின்றார். மற்றொரு பாடலில்,

கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம்நான் கொண்டனன்; வெற்றி தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!”

21. தோ. பா : வி. நா. மா. 8. 22. .ை 37 ஹே காளி1-2. 23. தோ. பா.: வி. நா. மா. 22 24, 32. . 43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/102&oldid=681121" இலிருந்து மீள்விக்கப்பட்டது