பக்கம்:பாரதீயம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SS பாரதீயம்

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்

கையப் பாடென் றொருதெய்வம் கூறுமே: கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்

கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டி லேயறங் காட்டெனு மோர்தெய்வம்:

பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட்

:w

ஒங்கும் இன் கவி ஒதெனும் வேறொன்றே.* என்ற இதனைப் படிக்குங்கால் வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்” “ என்ற நம்மாழ்வாரின் கூற்றை நினைக்கச் செப்கின்றது. மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தவேண்டும் என்ற ஆழ்வார் கொள்கையினையும் சிந்திக்கின்றோம்.

உ. சமுதாயக் கேடுகள்

எத்தனையோ விதங்களில் சமுதாயத்தில் பல்வேறு கேடுகளைக் காண்கின்தாச் பாரதியார். நாட்டு மக்களிடை காணப்பெறும் கேடான நிலைமைகளை எடுத்துக் காட்டுகின்றார்.

கம்பிக்கைகள் : பாரதியார் காலத்தில்தான் மூட நம்பிக்கைகள் நிலவினதாகக் கருதுதல் கூடாது. அவர் காலத்து மக்களிடையே காணப்பெற்ற மூட கம்பிக்கைகளை இன்றும் காணலாம். பேய்க ளிருப்பதையும், அவை மரத்தில், குளத்தில், வீட்டின் முகட்டில் நடமாடுவதையும் எண்ணி எண்ணி அஞ்சி அஞ்சிச் சாவதை எடுத்துக் காட்டுகின்றார். மந்திரவாதி'என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்லேயே இவர்கள் மனக்கிலி பிடித்துத் தத்தளிப்பர். யந்திர சூனியங்கள் போன்ற பல்வேறு துயர்கள் இவர்கள் மனத்தை வாட்டி நிற்கின்றன.

கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ80

என்று இத்தகைய பாரத நாடு இருத்தலாகாது என்று அதைத் துரத்துகின்றார்.

போலி சாத்திரங்களில் கம்பிக்கை : பாரதியார் கருத்துப்படிக் கிருதயுகச் சமுதாய அமைப்புக்கு அரணாக அமைந்தவை நான்மறை களும் சாத்திரங்களும் ஆகும். ஆனால், இறைவன் கோத்து வைத்த அந்த வேதங்களில் பல பொய்ம்மைகள், புலைாடைகள் புகுந்து விட்டனவாகக் கருதுகின்றார் கவிஞர்.

28. தோ. பா. 19. பராசக்தி . 2. 29. திருவாய் 3, 9 : 9. 36. தே. கீ : 16 போகின்ற பாரதமும்...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/104&oldid=681123" இலிருந்து மீள்விக்கப்பட்டது