பக்கம்:பாரதீயம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 9 |

சாதி வெறி : தன்னாட்டுப்பற்றும் தன்னரசுப்பற்றும், தன் மொழிப்பற்றும் இருக்க வேண்டிய இடத்தில் அவையெல்லாம் மாயா ஜால வடிவங்கொண்டு சாதி வெறிதலை விரித்தாடுகின்றது. தேர்தல் சமயத்தில் கட்சி வெறி, சாதி வெறியாக மாறிப் புதுக்கோலம் கொள் வதை எம்மருங்கும் காணலாம். தம் காலத்தில் இந்தச் சாதி வெறியைக் கண்டு வெகுண்டெழுந்தார் பாரதியார்.

ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்

அன்னியர் வந்து புகலென்ன திே-ஒர் தாயின் வயிற்றிற் பிறந்தோர்-தம்முட்

சண்டைசெய் தாலும் சகோதர ரன்றோ ?* என்று புதுக் குறைகளைப் புதிய கடையில் பாடுகின்றார். இந்தப் பாடல் முழுவதையும் நவீன கீதை'யாகக் கொள்வர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை.’

பாரதியார் சாதிக் கொடுமையைத் தகர்த்தெறியக் குழந்தையை அடிப்படையாகக்கொண்டு தொடங்கினார். பிஞ்சு மனங்களில் அவர் விதைத்த அறிவுரை விழலுக்கிரைத்த நீராக ஆயிற்று. மூத்தவர்களின் நடத்தைக் கோலங்களை நேருக்கு நேர் கானும் குழந்தைக்கு இந்த அறிவுரை கறிக்குதவாத ஏட்டுச் சுரைக் காயாயிற்று.

சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம் : திே உயர்த்தமதி கல்வி-அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்:

என்ற பாடல் குழந்தையின் உள்ளத்தில் ஆழப்பதியத் தக்க வகையில் தான் உணர்ச்சியோடு அமைந்துள்ளது. ஆனால், அது ர்ேக்குள் பாசி போல் வேர் கொள்ளாமல் கிடக்கின்றது. நாடோறும் சாதிப் பிரிவினை நிரந்தரமாகவே இருக்கும் சூழ்நிலைதான் வளர்ந்துகொண்டு வரு வதைக் காண்கின்றோம். தேர்தல் காலத்தில் இந்தப் பிரிவினை பேராற்றலைப் பெற்று வருவதைக் காண்கின்றோம். -

பிறப்பினால் உயர்வு கற்பித்த கொள்கை ஆழ்வார்கள் காலத்தி லயே தகர்ந்தது. பிறப்பினால் பார்ப்பனரல்லாத நம்மாழ்வாரைப்

G

39. தே. கீ. 11, வங்தேமாதரம்-3

40. பத்மநாபன், சா. அ. பாரதியார் கவிநயம் (தொகுப்பு)

10வது கட்டுரை.

41. பல்வகைப் பாடல்கள் : 2 பாப்பாப் பரட்டு-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/107&oldid=681126" இலிருந்து மீள்விக்கப்பட்டது