பக்கம்:பாரதீயம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 93

வழக்கம்). இந்த மாவுத்தன் அந்த யானையைக் கருணையின்றி அடித்துக்கொண்டிருந்ததைக் கண்ட பாரதியார் அவனிடம் ‘மிருகங் களை அன்பினால் பழக்கவேண்டும்’ என்று இதோபதேசம் செய்ய, உடனே அவன் தன் சாத்திரக் கட்டுகளை நீளமாக அவிழ்த்து விரிக்கத் தொடங்கினான். இந்த யானை கீழ்ஜாதியானை: யானைகளில் பிரம்ம, கத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக விருக்கின்றன. அவற்றுள் இது சூத்திர ஜாதியைச் சேர்ந்த யானை, மனிதர்களில் சூத்திரர்களுக்குள்ளே ஈழுவர் என்ற ஜாதி யார் இருக்கிறார்களே, அதேமாதிரி இந்த யானை வீரன்’ வகுப்பைச் சேர்ந்தது’ என்பதாக...பாரதியார் கூறுகின்றார் : நான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச் சொல்லியதன் நோக்கம் யாதெனில், கம்மவர்கள் மனத்தில் இந்த ஜாதிக்கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையை எடுத்தால் அதில் பிரம்ம, கடித்திரிய, வைசிய, குத்திரர்: குதிரை யிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரகங்களிலும் அதே மாதிரி பிரம்ம, கூத்திரிய, முதலிய ஜாதிபேதங்கள். இரத்தினத்திலும் அப்படியே!’

இந்தச் சாதிக் கொடுமை பாட்டியல் இலக்கணம் எழுந்த காலத்தில் தமிழ் எழுத்துகளில் நான்கு வருணத்தாருக்கும் உரிய எழுத்துகள் எவை எவை என்று பாகுபாடு செய்திருப்பதில் காணலாம். கற்றறிந்த புலவர்கள் செப்த விநோத செயல்களில் இதுவும் ஒன்று. சாதிக் கொடுமைகள் வேண்டாம்” என்று கூறியவர் பாரதி ,

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார். ‘

என்றும் இக்கொடுமைகளை வகுத்தும் காட்டியுள்ளார்.

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை: - அவை பேருக் கொருகிற மாகும்.

45. பாரதியார் கட்டுரைகள் - பக். 399.400 46. ப. பா : - 3. முரசு - 8 47. . - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/109&oldid=681128" இலிருந்து மீள்விக்கப்பட்டது