பக்கம்:பாரதீயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியர சானை,

பொழுதெலாம் கினதுபே ரருளின் நெறியிலே காட்டம் கருமயோ கத்தில்

கிலைத்திடல் என்றிவை யருளாய் குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே !

-பாரதியார்

ைேடபெற்றுக்கொண்டிருப்பது இலக்கிய மறுமலர்ச்சி யுகம். அதில் நாம் பாரதி நூற்றாண்டில் வாழ்கின்றோம். தமிழ்கூறு நல் லுலகமெங்கும் பாரதி நூற்றாண்டு விழாச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. பாரதியாரின் படைப்புகளில் மக்கள் ஆழங்கால் படுகின்றனர். பாரதியாரை ஆழ்ந்து கற்குங்கால் நாம் ஆய்ந்து கண்ட முடிவுகள் யாவை : தமிழ் மொழியில் கவிதையாயினும் உரைநடையாயினும் முதன் முதலாக எளிய நடையை அழகுற அமைத்த பெருமை பாரதியாரையே சாரும். பரரதியாரின் கவிதை வேர் பண்டைத் தமிழ் இலக்கியப் புலத்தில் ஆழமாய் ஒடியுள்ளதை யும் அதில் பூத்த மலர்கள் புதியதொரு சோபையைக் கண்டிலங்கு வதையும் காண முடிகின்றது. அவர் உள்ளம் கம்பனின் கங்கை வெள்ளக் கவிதையில் மூழ்கிக் களித்ததையும், வான் புகழ் கொண்ட வள்ளுவரின் நூலில் ஈடுபட்டிருந்ததையும் நோக்க முடிகின்றது: அவர்தம் நெஞ்சம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் கரைந்த தையும், பக்திச் சுவை கனி சொட்டச் சொட்டத் திகழும் ஆழ்வார் களின் பாசுர ஊற்றுகளிலும் இராமலிங்கர், தாயுமான அடிகள் இவர்களின் தீஞ்சுவைக் கவிதை ஓடைகளிலும் நீராடி மகிழ்ந்ததை யும் உணர முடிகின்றது.

இவற்றையெல்லாம் நன்கு அறிந்து தெளிந்த கவிமணியவர்கள் ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா !” என்று பட்டிக்காட்டான் ஒருவன் வாயில் வைத்துப் பேசுகின்றார். பட்டிக்காட்டான் தான் பெற்ற பாரதியின் பாட்டதுபவத்தை,

1. கவிதைகள் : சுயசரிதை - 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/11&oldid=681129" இலிருந்து மீள்விக்கப்பட்டது