பக்கம்:பாரதீயம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப பாாவை 95

வேலை தவறிச் சிதைந்தே-செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி, என்கின்றார். இங்குக் கவிஞர் வீண் கவலை கொள்ளுகின்றார் என்றே தோன்றுகிறது. பிறப்பின் அடிப்படையில்தான் தொழில் செய்ய வேண்டும் என்ற கருத்தினால்தான் இந்தக் கவலை-குழப்பம்கவிஞரிடம் எழுந்ததாகவே தோன்றுகிறது. வேலையும் தவறிச் சிதையாது: மானிடச் சாதியும் செத்து வீழ்ந்திடாது. இலாபம் கருதி எல்லாத் தொழில்களையும் எல்லாச் சாதியாரும் மேற்கொள் வதால் உலகம் சரி வர இயங்கிக்கொண்டுதான் வரும். எனவே, தொழிலை மேற்கொள்ளும் தகுதி பிறப்பினால் ஏற்பட்டது என்ற கொள்கை தானாகவே தகர்ந்து போகின்றது.

இந்தக் குலப்பிரிவு இறைவனால் வகுக்கப்பட்டதாகவும், பிற் காலத்தில் மனிதர்கள் அந்த அமைப்பை காசமுறப் பண்ணிவிட்ட தாகவும் கவிஞர் கருதுவது மற்றொரு குழப்பம்.

நாலு குலங்கள் அமைத்தான் ;-அதை

நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்’ என்ற கூற்று குழப்பத்தினால் எழுந்ததே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே உண்மை. அடுத்த அடி பாடும்போதே இக் குழப்பம் நீங்கி விடுகின்றது கவிஞருக்கு.

சீலம் அறிவு கருமம்-இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்ேற-வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் என்று உண்மையை கவின்றுவிடுகின்றார்.

போலிச் சுவடியை யெல்லாம்-இன்று

பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண்டென்பான் என்று கண்ணன் வாக்கில் வைத்துப் பேசுகின்றார் : தந்தை பெரியார் பாணியில் பேசுகின்றார். காட்டில் தாண்டவமாடும் சாதி வெறியைக் கண்டு இவ்வாறு வெகுண்டுரைக்கின்றார் என்று கருத லாம்.

ஒற்றுமையின்மை : இந்த நோய் மனித சாதியிடம் புற்றுநோய் போல் வளர்ந்து வருவதை இன்றும் காணலாம். எல்லாக் கட்சி களிலும் பிளவுகள் தோன்றுவது அக்கோயின் அறிகுறிகளாகும். அரசியல் கட்சிகளின் பிளவுகளை,

50. க. பா : கண்ணன்-என் தந்தை-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/111&oldid=681131" இலிருந்து மீள்விக்கப்பட்டது