பக்கம்:பாரதீயம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாரதீயம்

எங்கள் காட்டில் கட்சிகள் பற்பல குட்டிகள் போடும். ‘

என்று ஒரு புதுக்கவிதை கிண்டல் செய்கின்றது. ஒவ்வொரு குடும் பத்திலும் இப்பிரிவு நோய் ஊடுருவிக் கிடக்கின்றது. இங்கிலையை எண்ணி

கொஞ்சமோ பிரிவினைகள்!-ஒரு

கோடிஎன் றால்அது பெரிதாமோ? ?? என்று ஏங்குகின்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் பிரிவுக்கு வித்திடும் கொடுமையை அவர் நெஞ்சு பொறுக்க முடியவில்லை.

ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்

ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால் கெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு

கெடுகாள் இருவரும் பகைத்திருப்பார். என்று பிரிவுக்குக் காரணமாயுள்ள சிறு நிகழ்ச்சியைக் குறியீடு களினால் விளக்குகின்றார் கவிஞர்.

ஒன்றுபட் டால்உண்டு வாழ்வே-நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே ‘’ என்று நவீன கீதையின் வாக்காகக் கவிஞர் ஒலிக்கின்றார். இதில் ஒற்றுமையின்மையின் கேட்டினை எடுத்துக் காட்டி ஒற்றுமையின் இன்றியமையாமையை விளக்குவதைக் காணலாம்.

பெண்ணுரிமை : பெண்ணுரிமைபற்றிய சி ந் த ைன பாரதி யாரிடம் மிகுதியாகவே இருந்தது. பெண்களுக்கு இவ்வுரிமை மிகவும் இன்றியமையாதது என்று வற்புறுத்துவர். சுய சரிதையில் இவர்,

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளிர் மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்

மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!

பெண்ணுக்கு விடுதலைகீ ரில்லை யென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை 84

51. மீரா ஊசிகள்- தலை குனிவு-பக் 57 52. தே.கீ 15. பாரத மக்களின் தற்கால நிலைமை=4 53. 2ை : 1. வந்தே மாதரம்-4 54. பாரதி அறுபத்தாறு-45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/112&oldid=681132" இலிருந்து மீள்விக்கப்பட்டது