பக்கம்:பாரதீயம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 97

என்று பெண் விடுதலையை வற்புறுத்துவர். கம்மைப் பிறப்பித்துப் பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த தாய் உமையவளுக்கு ஒப்பாவாள் என்பது கவிஞரின் அதிராக் கொள்கை. தாய்க்கு மேல் இவ்வுலகில் வேறொரு தெய்வம் இல்லை என்பது இவர் கருத்து. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கிலும் அன்னை தானே முதலிடம் பெறு கின்றாள்? ஒரிடத்தில்,

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!

மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் 4 என்று அன்னையையும் மனைவியையும், உயர்த்திப் பேசுவர். இன்னும்,

போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்

புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே என்று இதற்கு அரணும் அமைத்துக் காட்டுவர். காதல் செயும் மனைவியே சக்தியென்றும், கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்’ என்றும் கூறுவர்.’

ஆணும் பெண்ணும் சமம் என்று முற்கால நூல்கள் கூறும் , ஆண்ே உயர்வு, பெண் அடிமை என்பது தற்கால நூல்கள் புரட்டிப் பேசும்.

இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால் ஆடவருக் கொப்பில்லை மாதர், ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை : என்ற வீட்டுமன் பேச்சில் இதனைக் காணலாம்.

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொதுவான வழக்கமாம் : என்று புதுமைப்பெண் வாயில் வைத்துப் பேசுவர்.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம் :

5+FFF5. LIETID-50 55. — 6 - 7 56. பாரதி அறுபத்தாறு-50 57. பா. ச-5.64 : அடி (61-64) 58. ப.பா : 4. புதுமைப் பெண்-6 59. டிை ை4 r-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/113&oldid=681133" இலிருந்து மீள்விக்கப்பட்டது