பக்கம்:பாரதீயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 99.

களையுடையவர் பாரதியார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யவர்கள்,

மங்கைய ராகப் பிறப்பதற்கே.நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா ! என்று தாய்க் குலத்தையே உயர்த்திக் கூறியுள்ளமை ஈண்டு நினைவு கூரத்தக்கது.

பொதுவுடைமைக் கருத்து : பாரதியாரின் மேல்மனத்தில் எப்போதும் சமூகத்தில் நிலவும் கேடுகள் தோன்றிக்கொண்டிருந்தன; அவர் உள்மனம் அதற்குரிய கழுவாயைச் சிந்தித்துக்கொண் டிருந்தது. இதன் காரணமாகவே எதைப்பற்றிப் பாடினாலும் சமுதாயத்தைப்பற்றிய எ ண் ண ம் நிழலிடுவதைக் காணலாம். இரஷ்யப் புரட்சியை மாகாளி பராசக்தியின் கடைக்கண் நோக்கு? என்றே கருதுகின்றார் 5ம் கவிஞர். அதனால்தான் அங்கு ஆகா. வென் றெழுந்தது.பார் யுகப் புரட்சி என்று சங்கநாதம் செய்கின்றார். இஃது உலகிற்கோர் புதுமை என்பது பாரதியாரின் கருத்து.

அந்த நாட்டில் பொய் சூது தீமையெல்லாம் அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்த்தோங்கின. மேலும் அங்காட்டில்,

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை :

பிணிகள்பல உண்டு : பொய்யைத் தொழு தடிமை செய்வார்க்குச் செல்வங்கள்

உண்டு ; உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு.85 இன்னும் அங்கு,

இம்மென்றால் சிறைவாசம் : ஏனென்றால்

வனவாசம் : இவ்வா றங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே

அறமாகி கின்றது. இந்த நிலையில்தான் பராசக்தி கண் விழிக்கின்றாள். இதனைக் கவிஞர்,

அம்மைமணங் கனிந்திட்டாள் : அடிபரவி

உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுதல் விழியாலே

நோக்கினாள் ; முடிந்தான் காலன்.”

64. மலரும் மாலையும் - 73. பெண்களின் உரிமைகள்-1 65. தே. கீ. 52. புதிய உருவியா-3 66. ை ை4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/115&oldid=681135" இலிருந்து மீள்விக்கப்பட்டது