பக்கம்:பாரதீயம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 10 :

முப்பது கோடி ஜனங்களiன சங்கம்

முழுமைக் கும்பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம்

உலகத்துக்குஒரு புதுமை...?? என்று கற்பனையில் காண்பர். இனிய பொழில்கள் நெடிய வயல்கள் நிறைந்த வளமிக்க நம் நாட்டில், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாட்டில்,

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் கோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ :

என்று கேட்கின்றார். இந்த இழிநிலை ஏற்படாதிருப்பதற்கு ஒரு வழியையும் தெரிவிக்கின்றார்.

இனியொரு விதிசெய் வோம்-அதை

எந்த நாளும் காப்போம் ; தனியொருவனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடு வோம். என்ற பாடற் பகுதியில் இந்த வழியினைக் காணலாம். இரஷ்யப் புரட்சி'யைப் போன்ற ஒரு புரட்சி நம் நாட்டில் ஏற்பட வேண்டும் என்று கனவு காண்கின்றாரா என்றுகூட நினைக்கத் தோன்று கின்றது. பாரதியாரின் தாசனாகத் தம்மைச் செய்துகொண்ட பாவேந்தர்,

ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்

உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொ டிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆப்விடுவார் உணரப் பா.ே’

என்று வேகத்துடன் இந்த வழியில் நடக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றார். மேற்காட்டிய தனியொருவனுக்கு’ என்ற அடியை நினைந்தே இக்காலப் புதுக் கவிஞர் ஒருவர்,

சமதர்மக் காற்று சஞ்சாரம் செய்த அபூர்வ அக்கிரஹாரம்.

72. தே. கீ. 17-பாரத சமுதாயம் 73. பாரதிதாசன் கவிதைகள்-உலகப்பன் பாட்டு. 74. பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி விடுமுறைச் சிறப்பு

மலர்-1981)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/117&oldid=681137" இலிருந்து மீள்விக்கப்பட்டது