பக்கம்:பாரதீயம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கல்விபற்றிய சிந்தனைகள்

தோற்றுவாய் :

பாட்டுத் திறத்தாலே- இவ்வையத்தைப் பாலித் திடவேணும். -

என்ற கவிதை வெறி: கொண்ட பாரதியின் சிந்தையில், கற்பனை யில், சிந்தனையில் எண்ணற்ற உயர்நோக்கங்கள் குமிழியிட்டெழுத் ததை அவர்தம் பாடல்களையும் கட்டுரைகளையும் கற்போர் நன்கு அறிவர். பொதுமக்கள் கடவுளை வழிபடுவதற்குத் திருக்கோயில்கள் இன்றியமையாதவை; வழிபாட்டிற்கு இன்றியமையாத நல்ல சூழ் நிலையையும் தூய்மையையும் போற்றிக் காப்பவை. அதுபோலவே பொதுமக்கள் தம் குழந்தைகள், சிறுவர்கள், வளர்ந்தவர்கள் இவர்கள் கல்வியில் பயிற்சி பெறுவதற்கு எல்லா நிலைகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இன்றியமையாதவை எனபதை,

வீடு தோறும் கலையின் விளக்கம்

வீதி தோறும் இரண்டொரு பள்ளி:

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி’

என்ற கவிதையில் புலப்படுத்துவர். நாடு விடுதலை பெற்ற பிறகு இந்த நிலையை எம்மருங்கும் காணலாம். வழிவழியாக முன்னோர் தேடி வைத்த அறிவுச் செல்வத்தைப் பின்னால் வரும் இளைஞர்கள் பெற்றுப் பயன்பெற வேண்டும், தம்மையும் உயர்த்தித் தாம் பிறந்த நாட்டையும் உயர்த்த வேண்டும் என்பது கல்விபற்றிக் கவிஞர் கண்ட கனவு. வறுமையின் காரணமாக இளைஞன் ஒருவன் கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படக் கூடாது என்பதையும் சிந்தித் துள்ளார் கவிஞர். செல்வர்களும் அரசும் இதற்கு வழிவகை செய்தல் வேண்டும் என்பதை வலிவுறுத்துவதுபோல்,

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்: தோ.பா. காணி நிலம் வேண்டும்-3. 2. ைவெள்ளைத் தாமரை-6,

l

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/119&oldid=681139" இலிருந்து மீள்விக்கப்பட்டது