பக்கம்:பாரதீயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

காட்டு மொழியுமவன் பாட்டினிசையில்-மிக்க நல்ல கற்கண்டினிமை சொட்டுமேயடா ஏட்டிலிம் மந்திரங்தான் கண்டவருண்டோ-ஈதவ் ஈசன் திருவருளென் றெண்ணுவாயடா. உள்ளத் தெளியுமொரு பாட்டிலேயடா-மிக்க

ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலேயடா கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலேயடா-ஊற்றாய்க்

கண்ணிர் சொரிந்திடுமோர் பாட்டிலேயடா..? என்று வடித்துக் காட்டுவர். மற்றும் கவிதைகளில் சொல்லுக்குச் சொல்லழகு ஏறுவதையும், கவி துள்ளும் மறியைப்போல் துள்ளு வதையும், கல்லும் கனிந்து கனியாவதையும், பசுங்கன்றும் பால் உண்டிடாது கேட்பதையும்; கவிதைகளில் குயிலும் கிளியும் கூவு வதையும், மயில் குதித்துக் குதித்து நடமாடுவதையும், வெயிலும் மழையும் அதில் தோன்றுவதையும், மலர் விரிந்து விரிந்து மணம் வீசுவதையும்; பாடல்களில் விண்ணில் ஒளிரும் மீன்கள் மின்னுவதை வும், விண்ணில் திகழும் மதி நிலவு வீசுவதையும், கண்ணுக்கினிய சோலை தென்படுவதையும், அச்சோலையில் இளமன்கள் களித்து விளையாடுவதையும், தேனும் தினை மாவும் பாவில் உண்ண முடி வதையும், மிகத் தித்திக்கும் முக்கனியை நுகர முடிவதையும், கானக் குழலினிசையையும் அதன் ஊடே களி வண்டு. மிழற்றுவதையும் கேட்க முடிவதைப் பிரித்துப் பிரித்துக் காட்டுவர்.

பாரதீயம் என்ற இந்நூல் பாரதீயம்’ என்ற கட்டுரையைத் தொடக்கமாகக் கொண்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகளில் யான் பாரதியாரின் கவிதைகளில் ஆழங்கால் பட்டதைக் காட்டியுள்ளேன். இவை பாரதியாரின் பாடல்களின் கயத்தைப் பளிச்சிட்டுக் காட்டுவதுடன் பாரதியாரின் பல்வேறு கொள்கைகளைப் பாங் கு ற எடுத்துக்காட்டும் விருந்துமாகும். இவற்றில் பாரதியாரின் ஆளுமைக் கோலங்களை ஒரு பல்லுருவம் காட்டியில் (Kaledoscope) காணும் காட்சிகளைப்போல் கண்டு மகிழ லாம். என்றாலும்,

பாவின் கயமெல்லாம்- யானும்

பகர வல்லேனோ ஆவின் பாற்சுவையை-நாழி அளந்து காட்டிடுமோ ?” என்ற கவிமணியின் அளவுகோலின் வரையறையை எண்ணிப் பார்த்தே யாகவேண்டும். அப்போதுதான் அந்த அளவுகோலின்

2. கவிமணி: மலரும் மாலையும்-பாரதியும் பட்டிக்காட்டானும்-7. 8. 3. தை - தை - 22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/12&oldid=681140" இலிருந்து மீள்விக்கப்பட்டது