பக்கம்:பாரதீயம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாரதீயம்

புத்தம் புதிய கலைகள்- பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் :

மெத்த வளருது மேற்கே- அந்த

மேன் மைக் கலைகள் தமிழினில் இல்லை ?

என்று மேனாட்டான் ஒருவன் கூறியதாக நினைந்து உள்ளம் குமுறு கின்றார் கவிஞர். அதிலும் சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை- மெல்லத் தமிழினிச் சாகும் என்ற கூற்றுகள் அவர் உள்ளத்தை உறுத்துகின்றன. இந்தப் பழிதீரக் கவிஞர் நமக்கு வழிகாட்டுகின்றார். -

சென்றிடு வீர்எட்டுத் திக்கும்- கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்”. என்றும்,

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’

என்றும் யோசனை கூறுகின்றார். தமிழில் எல்லாக் கலைகளையும் எழுதவும் விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் இன்னும் ஒப்புக் கொள்வதில்லை. இவர்கள், தமிழ்மொழியில் எல்லாவற்றிற்கும் தக்க கலைச்சொற்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு எண்ணு கின்றனர். எந்த மொழியிலும் அதன் வாயிலாகப் பொருள்களை விளக்க முயன்றாலன்றிப் புதிய கலைகட்கு வேண்டிய சொற்களும் சொற்றொடர்களும் அமைவதில்லை. பொருள்களை - கருத்து களை - எடுத்துக்கொண்டு விளக்க முயன்றால் இவை தாமாக அமைந்துவிடும். இவ்வாறே மேற்புல மொழிகளனைத்திலும் கலைச்சொற்கள் உண்டாகி அம்மொழிகள் வளர்ச்சியடைந்து வரு கின்றன. கலைச்சொற்களை உண்டாக்கிக்கொண்டு தாய்மொழி யில் கற்பித்தலைத் தொடங்க வேண்டும் என்று நினைப்பது, நீந்தக் கற்றுக்கொண்ட பிறகு நீரில் இறங்க வேண்டும் என்று எண்ணு வது போவாகும். செயலில் இறங்கினால்தான் அனைத்தும் சீர் படும். தார் சாலை அமைப்பதற்கு முன்னர் மண்சாலை, மண்ணும் பெரிய சல்லிகளும் கலந்த சாலை, மண்ணும் சிறிய சல்லிகளும் கலந்த சாலை என்றிப்படிப் பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ள தல்லவா? இந்நிலையைத் தாய்மொழி பயிற்றுமொழியாக அம்ை வதிலும் சந்திக்க நேரிடும். இலக்கிய இலக்கண வளமும், சொற்

7. தே.கீ. தமிழ்த்தாய்-9.

8. டிைஷெ-11.

9. ைதமிழ்- 3,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/122&oldid=681143" இலிருந்து மீள்விக்கப்பட்டது