பக்கம்:பாரதீயம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியற்றிய சிந்தனைகள் f07

களஞ்சியப் பேறும் பெற்றுள்ள தமிழ் மொழியின் நீர்மையை அறிந்து, பிற கலைகளைத் தமிழ்மொழியில் வடித்துத் தரும் பணியில் ஈடுபடு வோர்கள்தாம் தமிழ்மொழி அனைத்திற்கும் வளைந்து கொடுக்கும்’ என்ற உண்மையை அறிவர். அப்பொழுதுதான் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற வசையும் நீங்கும். தமிழ்மொழியும் வளர்ந்து மேலும் வளம் பெறும்.

உள்ளத்தில் உண்மையொளி புண்டாயின்

வாக்கினிலே ஒளியுண் டாகும்’

என்ற பாட்டடியில் கவிஞரின் ஞானம் கனிந்த நலம் தெளிவாகப் புலனாகும்.

பயிற்றிப் பலகல்வி தந்து- இந்தப்

பாரை உயர்த்திடல் வேண்டும்.’

என்று கவிஞர் அறிவியல் கல்விக்கு ஆற்றுப்படுத்துகின்றார். தாய் மொழிமூலம் அக்கல்வி பெற வாய்ப்பு அமைக்கப்பெறுமானால் பருத்தி புடைவையாய்க் காய்த்தது போன்ற பலனை நல்கும். விலைப் பாலைவிட முலைப்பால் சிறந்ததன்றோ?

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்:

வானையளப் போம்கடல் மீனையளப் போம் ;

சந்திரமண் டலத்தியல் கண் டுதெளி வோம்;

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.’

என்ற கவிதையில் கவிஞரின் அறிவியல் கல்வியில் பேரவா நிழலிடு வதைக் கண்டு மகிழல்ாம்.

அறிவியல் கல்வி தமிழில் (தாய்மொழியில்) தரப்பெறவேண்டு மென்பது இவர்தம் கொள்கை. அதற்கு முன்னர் அறிவியல் துறை கட்குரிய கலைச்சொற்களை அறுதியிடல் வேண்டும் என்பதற்கும் கோடி காட்டுகின்றார்; யோசனைகள் கூறுகின்றார். தமிழில் சாஸ்திர பரிபாஷை அஸ்திவாரக் காரியம், பரிபாஷை சேகரிக்க ஒருபாயம் என்ற தலைப்புகளில் இவற்றைக் காணலாம். இராஜாஜி தலைமையமைச்சராக இருந்த காலத்திலும் (நாடு விடுதலை அடை வதற்கு முன்பு), திரு தி. சு. அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகப் பணிபுரிந்த காலத்திலும் (விடுதலைக்குப் பின்னர்), திரு. சி. சுப்பிர

! 0. . -4.

11. ப. பா. முரசு-39. 12. தே. கி. பாரததேசம்- 11. 13. பாரதியார்-கட்டுரைகள். பக். (208-210).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/123&oldid=681144" இலிருந்து மீள்விக்கப்பட்டது