பக்கம்:பாரதீயம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f08 பாரதீயம்

மணியம் கல்வியமைச்சராகப் பணிபுரிந்த காலத்திலும் (விடுதலைக்குப் பின்னர்) கலைச்சொற்கள் தொகுக்கப் பெற்றதை நாம் அறிவோம்.14 இன்னும் தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

தொழில் கல்வி : தொழில்வளம் பெருகினால்தான் நாட்டு வளம் பெருகும் என்பது இக்காலப் பொருளியல் காட்டும் உண்மை. ஜப்பான் போன்ற சிறு நாடுகளிலும் செல்வம் கொழிப்பதை இன்று நரம் காணாமல் இல்லை. பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு இத்தகைய சிறுநாடுகளும் உதவி வருவது நமக்கு வியப்பினை உண் டாக்குகின்றது.

பல்வேறு தொழில்கள்மூலம் பல்வேறு பண்டங்களின் உற்பத்தி பெருக வேண்டுமானால் எல்லா மட்டங்களிலும் தொழில்கல்வி பெருக வேண்டும். சிறியனவும் பெரியனவுமான தொழிற்சாலைகள் பெருக வேண்டும். பண்டங்களை வேற்று நாடுகட்கு ஏற்றுமதி செய்து, அங்கியச் செலாவணியைப் (Foreign exchange) பெருக்கு தல் வேண்டும். இவ்வாறெல்லாம் நாட்டின் தொழில் வளம் பற்றிக் கனவுகள் காண்கின்றார் பாரதியார்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில்உடை யும்

பண் ணி மலைகளென விதிகுவிப் போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்

காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்!! :

என்ற பாடலில் இக்கனவுகளைக் கண்டு தெளியலாம். பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்தலையும் தொழில்சாலைகளை அமைத் தலையும் தொழில் கல்வி நிலையங்களை நிறுவுதலையும்பற்றிய திட்டங்களை,

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம்செய் வோம்

ஆலைகள் வைப் போம்கல்விச் சாலைகள்வைப் போம்.

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்:

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய் வோம்

குடைகள்செய் வோம்.உழு படைகள் செய் வோம்

கோணிகள் செய் வோம்.இரும் பாணிகள்செய் வோம்;

14. இதன் விவரங்களையும் இதன் தொடர்பான ஆக்கச் செயல்களையும் இந்த ஆசிரியரின் அறிவியல் தமிழ்’ (கட்டுரை.6) என்ற நூலில் (பாரி நிலையம், சென்னை600 001) விரிவாகக் காணலாம், 15. தே. கீ. பாரத தேசம்-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/124&oldid=681145" இலிருந்து மீள்விக்கப்பட்டது