பக்கம்:பாரதீயம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியற்றிய சிந்தனைகள் TG3

நடையும் பறப்புமுனர் வண்டிகள்செய் வோம்:

ஞாலம் நடுங்கலரும் கப்பல்கள்செய்: வோம்.

ஒவியம்செய் வோம்தல்ல ஊசிகன்செய் வோம்:

உலகத் தொழிலனைத்தும் உவந்துசெய் வோம்

என்ற கவிதைப் பகுதிகளில் கண்டு மகிழலாம்.

இன்னும் புதிய பாரதத்தில் சிங்களத் தீவுக்குப் பாலம் அமைத் தல், கங்கை நதியின் மிகை நீரை நடு நாட்டுக்குக் கொணர்த்து உழவுத் தொழிலை மேம்பாடடையச் செய்தல், நிலத்தினை அகழ்ந்து தங்கம் முதலாம் கனிவளங்களை அடைதல், முத்துக்குளித்தல், கோதுமைக்கு வெற்றிலையைப் பண்டமாற்று செய்தல் போன்ற வகைக்ளில் செல்வ வளத்தைப் பெருக்குதலைப்பத்றிய கனவுகள் காண்கின்றார்.

காசி நகர்ப்புலவர் பேகம்உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்: ‘

என்று வானொலிப் பெட்டிகள் உண்டாக்குவதையும் வானொலி அஞ்சல் செய்தலையும் முத்தாய்ப்பாகக் காட்டுவர்.

பொறியியல் கல்வியின் பயனை ஒரு கவிதையில் விளக்குகின் றார் கவிஞர் பெருமான், இறைவனையே ஒரு பெரிய பொறியியல் வல்லுநராகக் காண்கின்றார். அவன் படைத்து மன்பதைக்குத் தந்த இன்பங்களை நினைந்து போற்றுகின்றார்.

எத்தனைகோடி இன்பம்

வைத்தாய்:- எங்கள் இறைவா! இறைவ்ா! இறைவா!

அந்த நினைப்பில் ஒர் எக்களிப்பு தோன்றுகின்றது. இறைவா!’ என்று மூன்றுமுறை விளித்து இன்பவெறியில்- களிப்பில்- மூழ்கி விடுகின்றார். - - -

சித்தினை அசித்துடன் இணைத்தாய்:- அங்கு

சேரும்ஐம் பூதத்து வியனுலகு அமைத்தாய்; அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்

ஆகப் பலப்பலதில் அழகுகள் சமைத்தாய்’ என்ற பாடற்பகுதியால் நம்மைச் சிந்திக்க வைத்துவிடுகின்றார்.

16. .ை டிெ-9, 10, 12. 1 . 3. G;~7. - - 17. ைஇறைவா! இறைவா!-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/125&oldid=681146" இலிருந்து மீள்விக்கப்பட்டது