பக்கம்:பாரதீயம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியற்றிய சிந்தனைகள் 1 f :

தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற கூற்றினால் இதனைத் தெளியலாம் தொழில்’ என்ற கவிதையில் பல்வேறு தொழில் களைப் பாராட்டி,

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயி ரந்தொழில் செய்திடு விரே 1

என்று ஆற்றுப்படுத்துகின்றார். இதனால், இவர் தொழிற்கல்விக்கும் ஊக்கம் தருவதை உணரலாம். -

பெண் கல்வி : ஆறு, மலை, செல்வம், கலை, உடுக்கள் இவற்றையெல்லாம் பெண் தெய்வமாகப் பாவிக்கும் தம் நாட்டில் பாரதியார் இக்காலச் சமூகம் பெண்ணினத்திற்கு மதிப்புத் தராத இழிநிலையை நினைந்து பார்க்கின்றார். ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் என்பதில் அழுந்திய மனத்தையுடைய கவிஞர் பெண் னினத்தைப்பற்றிச் சிந்திப்பது இயல்பே யன்றோ? எனவே,

செவ்விது, செவ்விது, பெண்மை!-ஆ!

செவ்விது, செவ்விது, செவ்விது காதல்!

காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு

காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;

காதலி னாலறி வெய்தும்,-இங்கு

காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’

என்று பெண்மையையும் காதலையும் இணைத்துப் போற்றுவர். காதலின் ஊற்று பெண்ணன்றோ?

மனைக்கு விளக்கு மடவார் என்று பேசுவர் நான்மணிக்

கடிகையாசிரியர். ஒரு குடும்பத்தின் தலைவி கற்றவளாக இருந்தால் அவள் வழித்தோன்றல்கள் யாவரும் நல்ல சூழ்நிலையில் கல்வி பெறுவதற்கு அடிப்படை அமைத்துத் தருவாள் என்பது கவிஞரின் கருத்து, பெண்களுக்கு உரிமையில்லாததாலும், பெண்கள் படிக்கக் கூடாது என்ற மூடப் பழக்கம் எப்படியோ ஏற்பட்டுவிட்டதாலும், சமூகம் பெண்களை இழிவு செய்வதாலும் பெண்கல்வியில் துேக்கம் ஏற்பட்டதைக் கண்ட கவிஞர்,

19. தே.கீ. சுதந்திரப் பள்ளு-4.

20. ப.பா. தொழில்

21. ஆ. ஷெ-1. 22. த.பா. அந்திப்பொழுது-3, 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/127&oldid=681148" இலிருந்து மீள்விக்கப்பட்டது