பக்கம்:பாரதீயம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 பாரதீயம்

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கொ ளுத்துவோம்:

என்று வெகுண்டு உரைப்பர்.

வைய வாழ்வு தன்னில் எந்த

வகையி னும்ந மக்குளே

தாதர் என்ற நிலைமை மாறி

ஆண்க ளோடு பெண்களும்

சரிதி கர்ச மான மாக

வாழ்வம் இந்த நாட்டிலே’’

என்று வீத முழக்கம் செய்வர்.

இயல்பாகவே பெண்கள் அறிவுக் கூர்மை யுடையவர்கள்; ஆண் களைவிட இளமையிலேயே பொறுப்பை உணர்பவர்கள், கடமை யைப் போற்றுபவர்கள். இதனை நன்கு உணர்ந்த கவிஞர்;

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்,-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்,

மண்ணுக் குள்ளே சிலமூடிர்-நல்ல

மாத ரறிவைக் கெடுத்தார்?”

என்று சில அறிவிலிகளை அம்பலப்படுத்துகின்றார். சமூகத்தில்குடும்பத்தில்-ஆணும் பெண்ணும் இரு கண்களையொத்தவர்கள். ஒரு கண்ணைக் குத்திக் கெடுத்தல் மடமைச் செயலாவது போலவே, அவர்கள் அறிவை வளராது தடுத்தலும் அறிவுடைமைச் செயலன்று என்று உவமையால் விளக்குகின்றார்.

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்

பேதைமை யற்றிடும் காணிர்.”

என்து பேசுவதைக் காண்க.

23. தே.கீ. விடுதலை- 3.

24. டிெ.

25. ப.பா. முரசு- 9.

26. டிெ- 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/128&oldid=681149" இலிருந்து மீள்விக்கப்பட்டது