பக்கம்:பாரதீயம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி பற்றிய சிந்தனைகள் | #3

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்.’ என்று மேலும் இக்கருத்தினை அரண் செய்வர். பெண்கள் உயர் கல்வியைப் பெற்று உயர்த்தோங்க வேண்டும் என்பது கவிஞரின் உட் கிடக்கை.

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்

ஒது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத

தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொத்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்: மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்: காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்: ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்:

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ: என்றெல்லாம் மேல்நிலைக் கல்வி பெற்ற பெண்கள் குலம் தழைக்கப் பேரவாக் கொள்கின்றார். பெண்கல்விபற்றி இங்ஙனம் பல இடங் களில் பேசுவார் கவிஞர். -

புதுமுறைக் கல்வி : பாரதியாரின் கவிதைகளையும் பிறவற் றையும் ஊன்றிப் பயிலுங்கால் அவர் ஏதோ ஒரு புதுமுறைக் கல்வியைப் பற்றிச் சிந்தித்ததாக ஊகம் செய்யத் தூண்டுகின்றது. இந்த முறைக் கல்வியினால் பண்பாடு, புதுமுறையான சமய நம்பிக்கை, பக்தி வளர்ச்சி, மூடப் பழக்க வழக்கங்களை ஒழித்தல் போன்ற வகையில்சீர்திருத்த முறையில்-மக்களிடம் அமைய வேண்டும் எனக் கருதி னாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இவற்றையும் காண் போம்.

பாரதியின் காலத்தில் மக்களிடம் மூடப் பழக்கங்கள் நிறைந் திருந்தன. பேய்கள், மந்திரவாதிகளின் செயல்கள்;யந்திர சூனியங்கள், பொய்ச் சாத்திரங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை-இவற்றைக் கண்டு

27. .ை புதுமைப்பெண்-4.

28. டிெ- 8, 9. 4 jr—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/129&oldid=681150" இலிருந்து மீள்விக்கப்பட்டது