பக்கம்:பாரதீயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

எல்லையை உண்மையிலேயே உணர முடியும். கவிதைகளைச் சுவைத்துக் கூறுகின்றவர்களின் கருத்துகளெல்லாம் அவர்களுடைய உணர்ச்சியையே சார்ந்திருக்கும் என்று கொண்டால் இங்குக் காணப் பெறும் கூற்றுகள் வாதத்திற்கு இடம் தரா. பல்லாண்டுகளாக யான் பாரதியாரின் பாடல்களைச் சுவைக்கும்போது குமிழியிட்டெழுந்த என் கருத்துகள் பாரதியாரின் நூற்றாண்டில் பாகுபடுத்தப்பெற்று நூல் வடிவம் கொண்டு தமிழ்கூறு நல்லுலகில் கடையாடுகின்றன. பாரதியாரின் படைப்புகளில் ஈடுபாடு கொண்ட அன்பர்கள், அறிஞர்கள் என்னுடைய இந்த நூலிலும் கவனத்தைச் செலுத்து வார்கள் என்பது என் உறுதியான கம்பிக்கை. அத்தகைய பேற்றினை இந்நூல் பெறுமானால் அதனை என் பெறற்கரிய பேறாகக் கருதுவேன்.

இந்த நூலின் கைப்படியை அன்புடன் ஏற்று வெளியிட்ட பழகியப்ப்ா சகோதரர்கட்கு என் நன்றி கலந்த அன்பினைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன்.

இந்த நூலுக்கு அழகிய அணிந்துரை நல்கிய டாக்டர் ஒளவை நடராசன் என் உடன்பிறவாச் சகோதரர் போன்றவர். டாக்டர் மு. வரதராசனின் பல நன்மாணாக்கர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியங் களையும் இலக்கணங்களையும் பழுதற ஒதிப் பயன் பெற்றவர். அடக்கமான பண்புடையவர். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். தமது கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் பேச்சால் பல்லாயிர்க்கணக்கான மக்களின் மனத்தைக் கவர்ந்து வருபவர். இத்தகைய கெழு தகை நண்பர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கினமைக்கு என் அன்பு கலந்த நன்றிய்ை உரித்தாக்குகின்றேன்.

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராசன் அவர்களை அறியாத தமிழர்களே இரார். சட்ட துணுக்கங்களை அறியும் திறன் ஒருபுறமிருக்க, ஆங்கிலம், ஃபிரெஞ்சு என்ற இரண்டு அயல் மொழிகளிலும் வல்லுநர். தமிழ் இலக்கியங்களில் மிக வு ம் ஆழங்கால் பட்டுச் சுவைக்கும் பேரன்பர். ரசிகமணி டி. கே. சி.-யின் முதல் சீடர். ரசிகமணி 19. கே. சி. யின் வாழ்நாள் காலம் முதல் தாம் மறைந்த காலம் வரை ரசிகமணியின் புகழ் பரப்பி வந்த பெருமகனார். ரசிகமணி கண்ட வட்டத்தொட்டியின் தலைவராக இ குந்து பல இலக்கியக் கூட்டங்களை நடத்திப் பல்லாயிரக்கணக்கான தமிழன்பர்க்ட்கு இலக்கிய ரசனை யினைத் தொற்று போல் பரப்பினவர். கம்பனையும் வள்ளுவனையும் கரைத்துக் குடித்தவர். இவர்தம் அருந்தமிழ் நூல்கள் அனைத்தும் ரசனையின் வடிவங்கள். இவர்தம்,இலக்கியங்களை மேனாட்டாரும் அறியும்படி அரிய ஆங்கில நூல்களை வெளியிட்டு உதவியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/13&oldid=681151" இலிருந்து மீள்விக்கப்பட்டது