பக்கம்:பாரதீயம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 14 பாரதீயம்

நெஞ்சு பொறுக்குதிலையே’ என்று நொந்துகொள்ளுகின்றார். சாதிக் கொடுமைகள், சாதிப் பிரிவுகள், பலபல தெய்வ வழிபாடு களால் பிரிவுகள் - இவற்றைக் கண்டு இரங்குகின்றார். வெள்ளை நிறப் பூனையொன்று சாம்பல் நிறம்,கருஞ்சாந்து நிறம், பாம்பு நிறம், பாலின் நிறம் - இந்நிறங்களில் குட்டிகள் போட்டாலும் அவையாவும் ஒரே தரமானவை என்று எடுத்துக் காட்டுகின்றார். எங்கும் சகோதரத் தன்மை நிலவ விழைகின்றார்.

சமயத்தைப்பற்றியும் சில கருத்துகள் இவர் பாடலில் சிதறிக் கிடக்கின்றன. அன்னை பராசக்தியே சிந்தையாலும் செய்கையாலும் இவர் வழிபடும் தெய்வம் என்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை-தஞ்சமென்றே வையமெலாம் காக்கும் மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு. “ே என்ற வெண்பா இக்கருத்தினை அரண் செய்யும். விநாயகர், முருகன், காளி, முத்துமாரி, கோமதி, நான்முகன், கண்ணன், திருமகள், கலைமகள், அல்லா, யேசு முதலிய தெய்வங்கள் சிறப்பாகப் பேசப் பெறுவதால் இவர்தம் சமரச நோக்கம் புலனாகும்; இவர்தம் தோத்திரப் பாக்களும் ஞானப் பாடல்களும் இக்கருத்தினை அரண் செய்யும்.

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்!--பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டாமெனல் கேளிரோ?81 என்ற பாடல் ஒன்றே போதும் எடுத்துக்காட்டுக்கு.

ஒம் நமச்சிவாய’, ஹரி ஹரி, ராம ராம, சிவசிவ , ஒம் சக்தி என்று செபித்தாலும் யேஹோவா, அல்லா நாமங்களைப் பேணினாலும் அவை யாவும்’ ஒரே பரம்பொருளைப்பற்றியனவாகும் என்பர் கவிஞர். அங்ஙனமே பல சமயங்களைப்பற்றியும் கூறுவார்:

பூமியிலே, கண்டம்ஐந்து, மதங்கள் கோடி!

புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம், சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம், 29. தே.கி. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை. 30. தோ.பா. மகா சக்தி வெண்பாட 2. 31. வே.பா. அறிவே தெய்வம்- 1. 82. பாரதி அறுபத்தாறு- 63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/130&oldid=681152" இலிருந்து மீள்விக்கப்பட்டது