பக்கம்:பாரதீயம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி பற்றிய சிந்தனைகள் 1 1 5

நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே!

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

பூமியிலே வழங்கிவரும் மதத்திற் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்; சாமீநீ,; சாமிநீ; கடவுள் நீயே:

தத்வமளி; தத்வமஸி; நீயே அஃதாம்; பூமியிலே நீகடவுள் இல்லை என்று

புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி

சதாகாலம் சிவோஹம் என்று சாதிப் பாயே’.

இவற்றால் இவர்தம் சமரச மனப்பான்மை தெளிவாகும். இத்தகைய கருத்துகள் நம் நாட்டு இளைஞர்களிடையே கால்கொள்ள பல நிலைகட்கும் பயன்படுமாறு கல்வி ஏற்பாடு (Curritaium) அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் இருந்திருத்தல் கூடும் என்று எண்ணத் தோன்றுகின்றது. .

இறுவாய் : இன்று நாட்டில் நடைபெறுவது ஜனநாயக நாடகம். ஆள்வோரிடம் மனத்துாய்மை இல்லை; நாட்டு முன்னேற் றத்தைப்பற்றியோ நாட்டுமக்கள் முன்னேற்றத்தைப்பற்றியோ “உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் ஆள்வோரின் சிந்தையில்-சிந்தனையில்-தெளிவான வழி தோன்று வதற்கே வாய்ப்பு இல்லாது போகின்றது. ஆகவே, நாமும் கவிஞ ருடன் சேர்ந்து ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும்,

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனியா சானை

பொழுதெலாம் நினதுபே ரருளின்

நெறியிலே நாட்டம் கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்.

என்ற மனநிலை அருள வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுவோமாக. பாரதியார் கல்விபற்றிக் கூறும் கருத்துகள் கல்வி ஏற்பாட்டில் இடம் பெறும் என எதிர்பார்ப்போமாக.

33. டிெ- 65, 66. 34. சுய சரிதை- 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/131&oldid=681153" இலிருந்து மீள்விக்கப்பட்டது