பக்கம்:பாரதீயம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாரதீயம்

பின்பற்றிப் பல கவிஞர்கள் எழுந்தனர். இவர்களுள் எஸ்ரா பவுண்ட் குறிப்பிடத்தக்கவர். இவர்தம் கருத்துகள் கவிதை வடிவில் பேரெழுச்சியை விளைவித்தன.

சற்றேறக்குறைய விட்மென் வாழ்ந்த காலத்தில் பிரெஞ்சு நாட்டில் குறியீட்டியல் கவிஞர்கள் (Symbolists) பெளதலேர், மல்லார்மே, பி. வெர்லெய்ன், ஏ. ரிம்பாடு போன்றோர் யாப்பிலக்கண விதிகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் யாப்பு விதிகளைப் புறக்கணிக்காவிட்டாலும், யாப்பு முறை, கருத்து வெளியீட்டிற்குத் தடையாக இருந்ததை உணர்ந்தனர். இவர்களுள் ரிம் பாடு தமது பதினேழாவது வயதில் ஒளி வெள்ளம் என்ற தலைப்பில் முதன் முதலாக வெளியிட்ட கவிதைகள் வசன நடையிலேயே அமைந்திருந்தன. வியப்புறும் வகையில் ரிம்பாடு (1854-1891) தமது உணர்ச்சிகளை அழகாக அவற்றில் வடித்துக் காட்டியிருந்தார். இவரும் ஜூல்ஸ் லாஃபோர்க் (1860-1887) என்பாருந்தான் கட்டற்ற கவிதை (Vers libre) யின் முதல் முயற்சியாளர்கள் என்று கருதப்பெறுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து 1889-இல் வியல் கிரிப்பின் என்ற மற்றொரு கவிஞர் கட்டற்ற கவிதைகள் (Le Versest 1ibre)என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை உலகுக்கு அளித்தார்.

ஃபிரெஞ்சு அமெரிக்க முயற்சிகள் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கால் கொள்ளலாயின. இங்கிலாந்தில் மில்ட்டன், வொர்ட்ஸ்வொர்த், மாத்யூ ஆர்னால்டு ஆகியோர் அவ்வப்போது ஆங்கில மரபில் சோதனை நிகழ்த்தியவர்கள். கவிதையின் உயிராற்றல் பகுதிகளை உரைநடையில்தான் வளமாகத் தருதல் இயலும் என்பது வொர்ட்ஸ் வொர்த்தின் கருத்தாகும். நந்தமிழ் மொழியிலும் இறையனார் களவியலுரையிலும், மறைமலையடிகள், பேராசிரியர் திரு. வி. க., பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை போன்றவர்களின் சில உரைநடைப் பகுதிகள் இத்தகைய உரை வளத்தைக் கொண் டிருத்தலைக் காணலாம். விட்மெனின் வசன கவிதை முயற்சிகள் எஸ்ரா புவுண்டு, டி. எஸ். எலியட்டு போன்றவர்களால் ஆங்கில மொழியில் கையாளப் பெற்றன. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இத்தாலி, ஸ்பானிஷ், செர்மென், இரஷ்ய மொழிகளின் இலக்கண மரபில்

2. Symbolism-குறியீட்டியல். இஃது ஒரு வகை இலக்கிய உத்தி. புற உலகம் நிலையற்றதென்பதும், அதன் தோற்றம் நாம் காண்பதுபோல் இல்லை என்பதும், காண முடியாத ஏதோ ஒரு முழுமையின் பிரதிபலிப்பென்பதும் இந்த உத்தியைப் பயன்படுத்துவோரின் கொள்கை. நம் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களின் தோற்றமெல் லாம் மாயையானவை என்ப்து இவர்தம் கருத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/134&oldid=1396090" இலிருந்து மீள்விக்கப்பட்டது