பக்கம்:பாரதீயம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் f G

கணிசமான நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படலாயின. நந்தமிழ் மொழியிலும் பாரதியாரின் காலம் முதல் (இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம்) புதிய பாணியில் கவிதைகள் முகிழ்க்கத் தொடங்கின. தொடக்கக் காலத்தில் யாப்பு முறைகட்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகட்குச் சுதந்திரமான எழுத்து வடிவம் கொடுக்கும் இப் படைப்பு முயற்சி வசன கவிதை என்றே வழங்கப் பெற்றுள்ளது.

மேலை நாடுகளில் நடைபெற்ற கவிதைச் சோதனைகள் பாரதி யின் காலம்முதல் தமிழகத்திலும் நடைபெற்றன. வால்ட்விட்மெ னின் கவிதைப் பொருளிலும் ஜனநாயகக் குரலிலும் கவரப் பட்டவர் பாரதியார். விட்மெனைப்பற்றி அவர் கூறுவார்

இவருடைய பாட்டில் புதுமை என்னவென்றால் இது வசன நடைபோலத்தான் இருக்கும். எதுகை மோனை தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனை இல்லாத கவிதைதான் உலகத் திலே பெரிய பாஷைகளில் பெரும்பகுதியாகும். வால்ட் விட் மென் கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமேயல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோசனமில்லை என்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையதாக மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார்”.

பாரதியார் காலம்வரை கவிதை, புலவர்களிடமும் பண்டிதர் களிடமும் சிக்கித் தவித்தது. கவிதை, செய்யுள் வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கண விதிதான் இதற்கு முதற்காரணமாகும். இதனால் கவிதைப் பண்புமறைந்து யாப்பே முந்திரிக் கொட்டைபோல் முன்னின்று தரிசனம் தந்தது. பாரதியார் புலவர்களின் கடுமை யான நடையை-தேர் வடம் போன்ற விறைப்பான தமிழ் நடையை இவ்வாறு கண்டனம் செய்வார் :

அருமையான உள்ளக்காட்சிகளை எளிமைநடையில் எழுதுவது நல்ல கவிதை. ஆனால், சென்ற சில நூற்றாண்டுகளாகப் புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு சாதாரண மான விஷயங்களை அசாதாரண அலெளகிக அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானம் செய்துகொண்டார்கள்.’

3. பாலா : புதுக்கவிதை-ஒரு புதுப்பார்வை- பக், 41-இல்

காட்டப்பெற்றது. - 4. -ை பக். 42.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/135&oldid=681157" இலிருந்து மீள்விக்கப்பட்டது